வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். தொடர்ந்து சிந்து சமவெளி படத்தில் நடித்த இவருக்கு மைனா பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தலைவா, ஜெயம்ரவியுடன் நிமிர்ந்து நில் விக்ரமுடன் தெய்மகள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
2014-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்துகொண்ட அமலாபால் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதனைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அமலாபால் தற்போது கைதி படத்தில் இந்தி ரீமேக்கான போலோ என்ற படத்தில் அஜய் தேவ்கனுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது நண்பர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக விழுப்புரம் காவல் நிலையத்தில் அமலாபால் புகார் அளித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதனால் மன உலைச்சலுக்கு ஆளான அமலாபால் தற்போது ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வருகிறார் இதில் சமீபத்தில் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்தார்.
இதனிடையே தற்போது இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆசிரமத்தில் தங்கியுள்ள அமலாபால் அங்கு தியானம், மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பீச் ஒன்றில் அமலாபால் 2 பீஸ் உடையில் வலம் வரும் வீடியோ காட்சியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“