Advertisment

திரைப்பட விழாவுக்கு இப்படியா வருவது? நெட்டிசன்களிடம் சிக்கிய எமி ஜாக்சன்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன்

author-image
WebDesk
May 19, 2023 16:05 IST
New Update
Amy Jackion

கேன்ஸ் திரைப்பட விழாவில் எமி ஜாக்சன்

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை எமி ஜாக்சன் அணிந்திருந்த உடை தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

Advertisment
publive-image

கேன்ஸ் திரைப்பட விழாவில் எமி ஜாக்சன்

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன், தொடர்ந்து விஜயுடன் தெறி, தனுஷுடன் தங்கமகன், ரஜினியுடன் 2.0, உதயநிதியுடன் கெத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் ஏ.எல்.விஜய் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

publive-image

கேன்ஸ் திரைப்பட விழாவில் எமி ஜாக்சன்

இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை எமி ஜாக்சன் அணிந்து வந்த க்ளாமர் உடை தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா உலகளவில் பெரும் பிரபலம். திரைத்துறையில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

publive-image

கேன்ஸ் திரைப்பட விழாவில் எமி ஜாக்சன்

இந்த விழாவில் இந்திய நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றுள்ள நிலையில், தொடர்ந்து 20-வது ஆண்டாக பங்கேற்றுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த ஆண்டு தனது மகளுடன் பங்கேற்றுள்ளார். மேலும் பாலிவுட் நடிகைகள் சாரா அலிகான், மனுஷி செல்லார், ஈஷா குப்தா, ஊர்வசி ரவுட்டாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

publive-image

கேன்ஸ் திரைப்பட விழாவில் எமி ஜாக்சன்

இந்த நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள விரிப்பில் கிளாமர் உடை அணிந்து வந்த நடிகை எமி ஜாக்சன் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு பலரும் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில் கேன்ஸ் போன்ற உலக புகழ்பெற்ற திரைப்பட விழாவில் இப்படியா உடை அணிந்து செல்வது? என அவரது உடைக்கு நெட்டிசன்களின் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Amy Jackson
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment