கோவையில் ஜூலை 1"ம் தேதி நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடிகை ஆண்டிரியாவின் "ANDREA LIVE IN KOVAI " லைவ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது இதனைமுன்னிட்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் நடிகை ஆண்டிரியா செய்தியாளர்களை சந்தித்தார்
Advertisment
இதில் பேசிய அவர், ஃபர்ஸ்ட் டைம் சோலோ பப்ளிக் ப்ரோக்ராம் நடக்க உள்ளது கோவையில் பொதுமக்கள் மத்தியில்வரும் ஜூலை ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. கோவைக்கு அதிக முறை வந்துள்ளேன். காலேஜில் அதிக ஷோ செய்து உள்ளேன் பொதுமக்கள் மத்தியில் இப்போதான் முதல் முறையாக மியூசிக் செய்துள்ளேன். இந்த நிகழ்ச்சியில் நான் மட்டும்தான் பாட உள்ளேன் .
பல்வேறு இசையமைப்பாளர்கள் கோவையில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைப்பாளர் ஆனாலும் பாடி வருகிறார். கடந்த மாதம் கோலாப்பூர் இசைக் கச்சேரி நான் தனியாகத்தான் நடத்தி வந்தேன் இது பெரிய விஷயமாக எனக்கு தெரியவில்லை. இந்த இசைக் கச்சேரி இரண்டு மணி நேரம் நடைபெற உள்ளது.
இளையராஜா பாட்டு பாடுவேன் இசைக்கச்சேரி அனைத்து பாடல்களும் படுவோன். கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர் நான் பாடின பாட்டில் இதுவரை ஹு இஸ் தி ஹீரோ google ஊர் சொல்றியா என்ன மீனிங் சொல்றியா போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எதுவுமே ஈசியாக இல்லை அனைத்தும் கடினமாக உள்ளது. 15 வருடம் மியூசிக் கிளாசுக்கு சென்றுள்ளேன் எதுவுமே கஷ்டம் தான் என்று கூறியுள்ளார்.
இதில் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு என்ன ஒரு கேள்வி கோவை மக்களுக்கு பாடதான் வந்துள்ளேன் அவ்வளவுதான் என பதில் அளித்துள்ளார். மேலும் திருச்சியை விட கோவை நல்ல ரெஸ்பான்ஸை எதிர்பார்க்கிறேன். படத்திற்காக நான் சம்பந்தப்பட்ட இன்டர்வியூஸ் இதுவரை நிறைய பேசியுள்ளேன். இது ஷோ மட்டும் தான் படத்தை பற்றி அவ்வளவு விரிவாக பேச வேண்டாம்
கல்லூரி மாணவர்கள் அவர்கள் தான் என்னுடைய ரசிகர்கள் நன்றாக ஜாலியாக என்ஜாய் செய்வார்கள் என்று பேசிய ஆன்ட்ரியா சேலை கட்டுனா குறுகுறுன்னு பார்ப்பார்கள் பாடலை பாடினார். இந்த பாட்டு இந்த அளவுக்கு செல்லும் என எதிர்பார்க்கவில்லை என கூறிய அவர், எனது மியூசிக் நிகழ்ச்சிக்கு வாருங்கள் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த ஆன்ட்ரியா இறுதியில் கோவா படத்தின் இதுவரை இல்லாத உறவிது என்ற பாடலைப்பாடினார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“