ஆன்லைனில் ஸ்டோரேஜ் பாக்ஸ் ஆர்டர் செய்த நடிகை அனிதா சம்பத்-க்கு அழுக்கு படித்த புடவை டெலிவரி செய்யப்பட்ட நிலையில், இது குறித்து அனிதா சம்பத் வெளியிட்டுள்ள வீடியே பதிவு வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்கள் வாங்குவது மக்கள் மத்தியில் வழக்கமான ஒரு செயலாக மாறிவிட்ட நிலையில், பலரும் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்று வருகின்றனர். இதற்காக பல வெப்சைட்கள் இயக்கி வருகிறது. குறிப்பாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய 2 வெப்சைட்கள் தமிழகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வெப்சைட்டாக உள்ளது.
இந்த வெப்சைட்கள் ஆர்டர் செய்யும்போது, தங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் வருகிறதா என்பதை சரியாக பார்த்து வாங்குவது அவசியமாக உள்ளது. ஏற்கனவே செல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் டெலிவரி செய்த சம்பவம் எல்லாம் நடந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருள் டெலிவரி கிடைக்கும்போது அதை டெலிவரி செய்பவர்களே பரிசோதனை செய்து கொடுக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. விலை உயர்ந்த பொருட்களுக்கு மட்டுமே இது பெரும்பாலும் நடக்கிறது.
இதன் மூலம் ஆர்டர் செய்த பொருட்கள் மாறி வருவதை ஓரளவு தடுக்கப்பட்டிருந்தாலும், இன்னும் முழுதாக குறையவில்லை என்பதற்கு உதாரணமாக நடிகை அனிதா சம்பத் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் தனக்கு ஸ்டோரேஜ் பாக்ஸ் வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் ஆர்டர் போட்டுள்ளார். கடந்த ஜூன் 13-ந் தேதி டெலிவரி ஆன அந்த பொருளின் விலை ரூ899. அந்த நேரத்தில் பல டெலிவரிகள் வந்ததால், அதனை பிரித்து பார்க்க நேரம் இல்லாமல் அப்படியே விட்டுள்ளார்.
இதனிடையே இன்று பாக்ஸை பிரித்த அனிதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பாக்ஸில் ஸ்டோரேஜ் பாக்ஸ்க்கு பதிலாக அழுக்கு மற்றும் துர்நாற்றத்துடன் ரேஷன் புடவை இருந்துள்ளது. ரிட்டன் கொடுக்கும் நாள் முடிந்துவிட்டதால், இதை என்ன செய்வது என்று தெரியாமல், இருக்கிறார் அனிதா சம்பத். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில, நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த தவறுக்கு அமேசான் நிறுவனத்தில் இருந்து தனக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ள அனிதா சம்பத், இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதை பார்த்த நெட்டிசகள் மற்றும் ரசிகர்கள், இதேபோல் எங்களுக்கும் நடந்துள்ளது என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“