New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/Aranthangi-nisha.jpg)
Tamil News Update :விஜய் டிவியின் பல்வேறு காமெடி மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள அறந்தாங்கி நிஷா. ஒரு சில ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்
Tamil Actress Arandangi Nisha Social Media Post : சின்னத்திரையில் பெரிய போட்டிக்கு நடுவில் ஒற்றை பெண்ணாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியின் பல்வேறு காமெடி மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள இவர், ஒரு சில ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் கலகலப்பு 2, இரும்புத்திரை, மாரி 2, ஆண் தேவதை போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ள நிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவர், நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கும்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசனிடம் அவரது சினிமா பெருமைகளை சொல்லி இறுதியாக ஏன் நீங்கள் இப்போது பர்பாமன்ஸ் செய்வதில்லை கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் நிஷா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர் தனது சொந்த ஊரில் மாடு மேய்ப்பது போல் பதிவிட்ட வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலானது.
நிஷா ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றிருந்தாலும் அவரது தோற்றம் மற்றும் நிறம் குறித்து அவ்வப்போது கேலி கிண்டல்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவை நெட்டிசன்கள் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில், நிஷா அதிகம் மேக்கப் போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் 'பெயிண்ட் அடிப்பதை குறையுங்கள்' என்றும், எந்த பிராண்ட் பெயிண்ட் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் உங்கள் உண்மையான கலர் தான் அழகு, இப்படி எல்லாம் செய்யாதீங்க என்று அறிவுரை கூறி வருகின்றனர். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.