/tamil-ie/media/media_files/uploads/2023/06/Asin.jpg)
நடிகை அசின் தனது கணவருடன்
நடிகை அசின் தனது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து அசின் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அசின், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த அசின் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2016-மத் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிபர் ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Asin-1.jpg)
திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதில் இருந்து விலகிய அசின் தனது பெண் குழந்தை மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதனிடையே அசின் தனது கணவர் ராகுல் சர்மாவை விவாரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதற்கு ஏற்றார்போல் அசின் தனது கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து டெலிட் செய்திருந்தார்.
இதனால் இந்த விவாகரத்து தகவல் கிட்டத்தட்ட உண்மை என்பது போல் அனைவரும் இணையதளங்களில் பேசத் தொடங்கினர். இதனை அறிந்த நடிகை அசின் உடனடியாக இதற்கு முறறுப்புள்ளி அளிக்கும் விதமாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோடை விடுமுறையை ஜாலியாக கழித்து வரும் இந்த வேளையில், இருவரும் ஜாலியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் இதுபோன்ற கற்பனையான, ஆதாரமற்ற செய்திகளை பார்க்க முடிந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Asin-2.jpg)
இதைப்பார்க்கும் போது திருமணத்துக்கு முன் நடந்த சம்பவம் தான் ஞாபகம் வருகிறது. நாங்கள் எங்கள் குடும்பத்துடன் அமர்ந்து திருமண ஏற்பாடுகள் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்களை பரப்பினார்கள். இதைப்பார்த்து எங்களுக்கு சிரிப்புதான் வந்தது. அதேபோலத்தான் இப்போதும் செய்திருக்கிறார்கள். இந்த அற்புதமான விடுமுறை நாளில் 5 நிமிடங்கள் வீணாகிவிட்டது வருத்தம் அளிக்கிறது” என பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.