New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Chaithra-Reddy.jpg)
சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி
முதல் சீரியலே நெகடீவ் ரோலாக இருந்தாலும், இதன் மூலம் சைத்ரா ரெட்டி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி
சன்டிவியின் கயல் சீரியலில் நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சைத்ரா ரெட்டி, பெங்களூருவில் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவனு மேட்டே ஷ்ரவாணி என்ற கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
தமிழில் ஸ்ரீகுமார் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான சைத்ரா ரெட்டி நெகடீவ் ரோலில் நடித்து அசத்தினார்.
முதல் சீரியலே நெகடீவ் ரோலாக இருந்தாலும், இதன் மூலம் சைத்ரா ரெட்டி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தொடர்ந்து 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான எனெண்டு ஹெசரிடலி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள சைத்ரா ரெட்டி தற்போது சன்டிவியின் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
வில்லியாக நடித்து பிரபலமான சைத்ரா தற்போது நாயகியாகவும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இதில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் நாயகனாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களிலும் இவரது சிரிப்பு தனி கவனம் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சைத்ரா தனக்கே உரிதாக சிரிப்புடன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.