கவர்ச்சி மட்டும் போதாது நடிப்புத்திறமையும் வேண்டும் அதையும் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று நெட்சடின்கள் விமர்சித்ததை தொடர்ந்து ஓ மை கோஸ்ட் படத்தில் தான் கயிறு கட்டி கஷ்டப்பட்டு நடித்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார் நடிகை தர்ஷா குப்தா.
சின்னத்திரையில் சீரியல் நடிகையாக இருந்து திரைப்பட நடிகையாக மாறியவர் தர்ஷா குப்தா. விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான இவர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்த ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்த நிலையில், சமீபத்தில் வெளியான சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், கவர்ச்சி மட்டுமே சினிமாவுக்கு போதாது நடிப்புத்திறமையும் வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே தற்போது நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓ மை கோஸ்ட் படத்தில் தர்ஷா குப்தா தன் உடம்பில் கயிறு கட்டி கஷ்டப்பட்டு நடித்த வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கவர்ச்சியை தாண்டி உங்களது நடிப்புத்திறமையை வெளிப்படுத்துங்கள் என்று கூறிய பலருக்கும் இந்த வீடியோவை சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
காலையில் இருந்து மாலை 6 மணி வரை எதுவும் சாப்பிடாமல் சிறிதளவு தண்ணீர் கூட குடிக்காமல், இந்த காட்சியை படமாக்கினோம். கடின உழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது என்றும், கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/