Actress Deepa Shankar Speech : குக் வித் கோமாளி நிகழச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகை தீபா சங்கர் தற்போது பெண்கள் உருவம் குறித்து வெளி வரும் கேலி கிண்டல்கள் குறித்து பேசியுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகையாக அறியப்பட்டவர் தீபா சங்கர். மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடிப்கை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பங்கேற்ற குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.
தற்போது விஜய்டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர், தனது உருவம் குறித்து கேலி செய்த ஒருவருக்கு தனது உருக்கமான பேச்சின் மூலம் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். ஆனால் இந்த வீடியோவின் இறுதியில் இது எல்லாமே ப்ராங் என்று சொல்லும் அவர், எழுதி கொடுத்த டைலாக் என்று சொல்வது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், பெண்களின் உருவம் குறித்து கேலி செய்யும் ஒருவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, பெண்கள் கருத்தரித்த பிறகும், குழந்தை பெற்ற பிறகும் அவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். நாங்களும் ஒல்லியா இருந்தவங்க தான். என்ன மாதிரி இருக்கவங்க ஏன் இப்ப ஆனாங்கனு யாராவது யோசிச்சிருப்பீங்களா? நீங்க வீட்டிற்கு போகும்போது உங்க அம்மா காத்துக்கிட்டு இருப்பாங்க. நான் வீட்டுக்கு போகும்போது 2 ஜீவன் காத்துக்கிட்டு இருக்கும். நீங்கள் எனக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய் அல்லது கிளியோபாட்ராவை அனுப்பினால் அவர்கள் அம்மா என ஓடிவரமட்டார்கள்” அவர்களுக்கு நான்தான் அழகு என்று கூறியுள்ளார்.
Prank 😐… Fire vidalamnu patha..🚶 https://t.co/9TZ5Y8GVON pic.twitter.com/Uq3dzBZgrQ
— Maara™ (@Capoqaana) August 26, 2021
மேலும் உருவ கேலி மற்றும் நிற பாகுபாட்டை ஊக்குவிக்க வேண்டாம் விஜய் டிவியில் இப்படி நடக்குறது என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளா. தீபா சங்கரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வரும் நிலையில், இறுதியில் அவர் ப்ராங்க் என்று சொன்னது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பதே நிதர்சமான உண்மை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil