தனது இழுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்தேனா என்பது குறித்து நடிகை திவ்ய பாரதி விழிப்புணர்வுடன் விளக்கம் அளித்துள்ளது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கொங்கு மண்டலமான கோவையை சேர்ந்த திவ்ய பாரதி, மாடலிங் துறையில் கால்பதித்து அடுத்து சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஜி.வி.பிரகாஷின் பேச்சிலர் என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான திவ்யா பாரதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது பிக்பாஸ் முகின் ராவுடன் இணைந்து மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்குதம் திவ்ய பாரதி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தான் பள்ளி மற்றும் கல்லுரி காலத்தில் எதிர்கொண்ட உருவ கேலி தொடர்பான கடிதங்கள் உள்ளிட்ட பலவற்றின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவில் தான் கல்லூரி காலங்கள் அதிகமான உருவ கேலிகளை எதிர்கொண்டேன். இதில் எதையும் நான் விளக்கவோ அல்லது விரும்பவோ இல்லை. எல்லா குறைபாடுகளுடனுமத் உங்களை நேசிக்கிறேன் என்பதற்காக வெளியிட்டேன். சமீப காலமாக என் உடலமைப்பு போலியானது என்று கூறி வருகிறார்கள். மேலும் நான் இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்று கூறி வருகின்றனர்.
நான் கல்லூரியில் படிக்கும்போது பவுண்டா பாட்டில் எலும்புக்கூடு, பெரிய குண்டான பெண் உள்ளிட்ட பல கமெண்ட்களை சந்தித்துள்ளேன். அதேபோல் என்து வகுப்பு தோழர் உருவர் என் உடலமைப்கை கிண்டல் செய்து வரைந்த ஒரு புகைப்படம் இதில் உள்ளது. இவை அனைத்தும் என் மனதை பாதித்து என் உடலை வெறுக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. வெளியில் நடப்பது கூட யமாக இருந்தது
ஆனால் இதில் என் தவறு ஒன்றும் இல்லை. என் இடுப்பு இயற்கையில் அப்படித்தான் உள்ளது. நான் ஜிம்புக்கு போகவே இல்லை என்றாலும் நம்மை வெறுப்பவர்களும், காதலர்களும் இரண்டு தரப்பினருமே இருக்கிறார்கள். நம் குறைகளை நாம் எப்படிப் பறைசாற்றுகிறோம் என்ற சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது என்பதையும் உணர்ந்தபோது அது எனக்கு ஒரு பேரறிவின் தருணமாக இருந்தது.
அன்றில் இருந்து நான் என் உடலைத் நேசிக்க தொடங்கினேன். வித்தியாசமான உடல் அமைப்பைக் கொண்டிருப்பது பரவாயில்லை, அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களை எப்படி நேசிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அன்பான சக பெண்களே, விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையாகவும் அன்பாகவும் இருப்போம். இதில் நான் உங்களுடன் இருக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“