Advertisment

மாரடைப்பால் இறந்து விட்டேனா? வெளிநாட்டில் இருந்து விளக்கம் கொடுத்த நடிகை

தான் மாரடைப்பால் இறந்துவிட்டதாக வதந்தி பரவிய நிலையில், வெளிநாட்டில் இருந்து நடிகை ரம்யா விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
Sep 06, 2023 15:25 IST
Divya Spandana

நடிகை திவ்யா ஸ்பந்தனா

மாரடைப்பால் இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானதால் பதறிப்போன நடிகை ரம்யா ஜெனிவாவில் தான் நலமுடன் இருப்பதால் தகவல் தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisment

கடந்த 2003-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான அபி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ரம்யா. திவ்யா ஸ்பந்தனா என்ற இயற்பெயர் கொண்ட இவர், 2004-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான குத்து என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அதன்பிறகு அர்ஜூனுடன் கிரி, தனுஷூடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், ஜீவாவுடன் சிங்கம்புலி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த திவ்யா, பொல்லாதவன் மற்றும் வாரணம் ஆயிரம் படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

தற்போது கன்னடபடங்களில் கவனம் செலுத்தி வரும் திவ்யா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். 2013-ம் ஆண்டு கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பியான திவ்யா, தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான தனது சமூகவலைதளங்களில் பிரச்சாரங்கள் மெற்கொண்டு வருகிறார்.

இதனிடையே நடிகை திவ்யா ஸ்பந்தனா இன்று (செப்டம்பர் 6) திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவிக்க தொடங்கிவிட்டனர். இந்த தகவல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தான் ஜெனிவாவில் நலமுடன் இருப்பதாக கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள திவ்யா, இது குறித்து தனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து பிரபல பத்திரிக்கையாளரும், திவ்யாவின் நெருங்கிய தோழியுமான, சித்ரா சுப்பிரமணியம், தான் தற்போது திவ்யாவிடம் பேசியதாகவும், அவர் இப்போது ஜெனிவாவில் இருப்பதாகவும், அங்கிருந்து நாளை பிரேக் சென்று, அதன்பிறகு பெங்களூர் திரும்புவார் என்றும் தனது ட்விட்டர் பக்கததில் வெளியிட்டுள்ளார்.

“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment