ஒரு குழந்தைக்கு தாய் எப்போதும் துணையாக இருப்பார் என்று சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை நட்சத்திரங்களான அர்னவ் – திவ்யா ஸ்ரீதர் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில, திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமானார். அவரது கர்ப்ப காலத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இவரும் பிரிந்த நிலையில், கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அர்னவ் அடித்து துன்புறுத்தியதாக திவ்யா சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான போலீசார் அர்னவை கைது செய்து செய்த நிலையில், நிபந்தனை ஜாமீனில் வெளியெ வந்த இவர் தற்போது சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே கர்ப்பமாக இருந்த திவ்யா ஸ்ரீதருக்கு அவரது சீரியலில் நடித்த நடிகர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய நிலையில், டெலிவரிக்கு 10 நாட்களுக்கு முன்பு தனது துணைக்கு யாரும் இலலை என்று திவ்யா வருத்தத்துடன் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில், திவ்யா ஸ்ரீதருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது குழந்தை கவனிப்பு நடிப்பு என்று வேலை செய்து வரும் திவ்யா, ஷூட்டிங்கிற்கு தனது மகளுடன் கிளம்பி சென்றுவிடுகிறார்.
இதனிடையே அர்னவ் தன்னை போலவே பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் இதில் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணமே அர்னவ் தான் என்று கூறியிருந்தார். அதே சமயம் அர்னவும் திவ்யா ஸ்ரீதர் பற்றி அடுக்கடுக்கான பல புகார்களை கூறியிருந்தார். இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டு வருவதால் சமூகவலைதளம் பெரும் பரபரப்பாக இயக்கி வரும் நிலையில், சமீபத்தில் திவ்யா ஸ்ரீதர் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒரு தாய் தனது குழந்தைக்கு எப்போதும் துணையாக இருப்பார் என கூறியுள்ளார். தொடர்ந்து மற்றொரு வீடியோவில் கண்ணான கண்ணே பாடலுடன், குழந்தையை ஊஞ்சலில் வைத்துக் கொண்டு கொஞ்சி வருகிறார். எப்போதுமே பெண் குழந்தைகள் தாயின் பொக்கிஷம் என கூறியுள்ளார். இந்த பதிவுகளை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தை அர்னவை போல் உள்ளது என்றும், குழந்தையின் பிஞ்சு சிரிப்பை பார்த்துவிட்டு அர்னவ் உங்களிடமே வந்துவிடுவார் என்றும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”