New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Dushra-Vijayan.jpg)
துஷாரா விஜயன்
அன்புள்ள கில்லி என்ற படத்தில் நடித்த துஷாரா அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம நகர்கிறது என்ற படத்தில் நடித்திருந்தார்.
துஷாரா விஜயன்
தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துஷாரா விஜயன்.
முதல் படம் பெரிதாக போகாத நிலையில், அடுத்து இவர் நடித்த சர்பட்டா பரம்பரை திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது.
பா.ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தில் மாரியம்மா என்ற கேரக்டரில் துஷாரா விஜயன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அன்புள்ள கில்லி என்ற படத்தில் நடித்த துஷாரா அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம நகர்கிறது என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த இரு படங்களும் அவருக்கு பெரிதாக கைக்கொடுக்காத நிலையில், கடந்த வாரம் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் துஷாரா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த வகையில் சமீபத்தில் இவர் மேக்கப் இல்லாமல் இருப்பது போன்று வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யாருப்பா அந்த போட்டோகிராஃபர்? துஷாரா விஜயனை இப்படி டல்லா மாத்திட்டீங்களே என்று கூறி வருகின்றனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.