சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வரும் எதிர்நீச்சல் ப்ரியதர்ஷினி சமீபத்தில் மாலத்தீவில் இருந்து நாட்டியம் ஆடுவது போல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவராக இருப்பவர் திவ்யதர்ஷினி. தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். திவ்யதர்ஷினிக்கு முன்பே சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் அவரது சகோதரி பிரியதர்ஷினி.
Advertisment
Advertisements
தொகுப்பாளராக களமிறங்கிய அவர், டான்ஸ் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது சீரியலில் நடித்து வரும் ப்ரியதர்ஷினி, குழந்தை நட்சத்திரமாக பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கிண்டல் செய்யும் கேரக்டரில் சிறப்பான நடித்திருந்தார். சின்னத்திரையில் ஆக்டீவாக இருந்த பிரியதர்ஷினி திருமணமாகி குழந்தைகள் பிறந்தவுடன் நிகழ்ச்சியில் இருந்து விலகி குழந்தைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.
தற்போது 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் என்டரி ஆகியுள்ள பிரியதர்ஷினி சின்னத்திரையின் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கேரக்டரில் நடித்து வரும் நடிகை பிரியதர்ஷினி, சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் தற்போது அவர் மாலத்தீவில் இருந்து வெளியிட்டுள்ள க்ளாசிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”