scorecardresearch

என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றேன்னு கேப்பீங்களா? ஃபேஸ்புக்கில் கொந்தளித்த பாத்திமா பாபு

இந்துவான பாபு என்பவரை திருமணம் செய்துகொண்ட நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஏன் இந்து பெயர் வைக்கவில்லை என்று ஒருவர் கேட்டுள்ளார்.

Fathima Babu
பாத்திமா பாபு

பிரபல செய்தி வாசிப்பாளரும் பிக்பாஸ் செலிபிரிட்டியுமான பாத்திமா பாபுவிடம் நெட்டிசன் ஒருவர் அவரின் தனிப்பட்ட வாழக்கை குறித்து கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமான பாத்திமா பாபு, கே.பாலச்சந்தரின் கல்கி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள பாத்திமா பாபு சீரியலிகளிலும் நடித்துள்ளார்.

Fathima Babu Facebook
பாத்திமா பாபு ஃபேஸ்புக்

பாபு என்பவரை திருமணம் செய்துகொண்ட பாத்திமாவுக்கு ஆஷிக் மற்றும் ஷாருக் என்ற இரு மகன்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பாத்திமா பாபு, சமீபத்தில் தனது மகன்களின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இது குறித்து நெட்டிசன்கள் கேட்ட கேள்வியால் பாத்திமா பாபு கோபமாகியுள்ளார்.

இந்துவான பாபு என்பவரை திருமணம் செய்துகொண்ட நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஏன் இந்து பெயர் வைக்கவில்லை என்று ஒருவர் கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த பாத்திமா என் கணவருக்கே அது பற்றி எதுவும் பிரச்சனை இல்லாதபோது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார். ஞாயத்தைதானே கேட்டேன் மேடம் பொதுவெளியில் நான் தவறாக எதுவும் கேட்கவில்லையே என்று கூறியுள்ளார்.

நான் ஒரு இந்துவை பள்ளி வாசலில் நிக்கா பண்ணிக்கிட்டதால் இஸ்லாமிய பெயர்கள் இருக்கிறது பொத்திக்கிட்டு போகவும் என்று பதில் அளித்துள்ளார். அதற்கு அவர் பொது மேடையில் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த பாத்திமா பாபு, “பொதுமேடையில் என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கனு கூட கேப்பீங்களோ.. பொது மேடையாம்ல பொது மேடை” என கோபமாக பதில் அளித்துள்ளார்.

இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress fathima babu angry reply in facebook for netizens

Best of Express