தான் இயக்கி நடித்து தனது மகள் தயாரித்துள்ள மிஸ்ஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் வனிதா விஜயகுமார் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தனது அப்பா வசிக்கும் தெருவில், வனிதா செய்த செயல் குறித்து அந்த படத்தில் நடித்துள்ள நடிகையும் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வைரல் நாயகியாக வலம் வரும் நடிகை வனிதா விஜயகுமார், விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்து திருமணத்திற்கு பின் திரைத்துறையில் இருந்து விலகினார். அதன்பிறகு, தனது கணவரை விவாகரத்து செய்த அவர், அடுத்தடுத்து திருமணம் செய்து ஏமாற்றத்தை சந்தித்தார். தற்போது தனது குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு ராபர்ட் மாஸ்டர் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தின் மூலம் கதாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக வனிதா விஜயகுமார் தற்போது ‘மிஸ்ஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். ராபர்ட் மாஸ்டர் வனிதா விஜயகுமார் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில், ஸ்ரீமன், பாத்திமா பாபு, செஃப் தாமு, உள்ளிட்ட பலர் நடிக்க, வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் படத்தை தயாரித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகையும் செய்திவாசிப்பாளருமான பாத்திமாப பாபு, வனிதாவை எனக்கு 18 வயதில் இருந்தே தெரியும். இந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக வனிதா ரொம்பவும் உழைப்பை போட்டு இருக்கிறார்.
இந்த படத்திற்காக, போஸ்டர் ஒட்டுகிறவர்கள், விடிய காலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் போது வனிதாவே அவர்களோடு சென்று போஸ்ட்ர் எங்கெல்லாம் ஒட்ட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதேபோல் தனது அப்பா வசிக்கும் தெருவில்,அதிகமான போஸ்டர்கள் ஒட்ட சொல்லி இருந்தார். இதற்கு, காரணம் அவங்க அப்பா முன்னாடி நான் இப்போ எப்படி இருக்கிறேன் பாருங்க என்று சொல்வதற்காக தான் வனிதா பல கஷ்டங்கள் பட்டு இருந்தாலும் இன்று அவருடைய உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
வனிதா எப்போதுமே அவரை சுற்றி இருக்கிறவங்க நல்லா இருக்கணும் என்று நினைப்பது தான் அவரின் குணம். இப்போ இருக்கிற சோசியல் மீடியாவால் நம்முடைய முகத்துக்கு நேரா பேச முடியாதவங்கள் கூட எவ்வளவு தரம் தாழ்ந்து கமெண்ட் செய்கிறார்கள். அதை எல்லாம் தாண்டி வனிதா வளர்ந்து, வந்து கொண்டிருக்கிறார் என்று பாத்திமா பாபு பேசியிருக்கிறார். இவரின் பேச்சை கேட்டு, வனிதா மேடையிலேயே கண்கலங்கி அழுதுள்ளார்.