பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி ஹேமா ராஜ்குமார் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா ராஜ்குமார், அங்குள்ள உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக தனது மீடியாவில் தனது பணியை தொடங்கினார்.
Advertisment
Advertisements
அதன் பின்னர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ஹேமா, விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார்.
அதனைத் தொடர்ந்து பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதில் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“