பிரபல நடிகை இலியான திருமணம் செய்யாமல் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பது குறித்து போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் இலியானா. தமிழில் கேடி எற் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் நடிததிருந்தார். அடுத்து இவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருந்த இலியானாவுக்கு ரன்பீர் கபூர் பிரியங்கா சோப்ரா நடித்த பர்ஃபி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பாலிவுட்டில் அவருக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை. கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு தி பிக் ஃபுல் என்ற படத்தில் நடித்திருந்த இலியானா தற்போது அன்ஃபெர் அன் லவ்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இலியான தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். ஆனால் இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில், இவரது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடாத இலியானா தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான தனது இன்ஸ்டா பக்கத்தில், தற்போது திடீரென கர்ப்பம் ஆவதே ஒரு தலை சிறந்த அனுபவம் என பதிவிட்டுள்ள இலியானா தனது கர்ப்பத்துக்கு காரணமான பார்ட்னர் உடன் இருக்கும் போட்டோவையே வெளியிட்டுள்ளார். மங்கலான வெளிச்சத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ரசிகர்கள் ஜூம் அடித்து பார்த்தாலும், இலியானாவின் கர்ப்பத்துக்கு காரணம் யார் என்பதை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதனால் இந்த போட்டோவில் இருப்பது யார் என்று இலியானாவே சொன்னால் தான் உண்டு என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் அவர் தனது அடுத்த போஸ்ட்டில் கணவர் யார் என்பதை அறிவிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“