Advertisment

விஜய் டி.வி-யின் ஹிட் சீரியலில் பிக்பாஸ் ஜூலி : அட்வகேட் கேரக்டராமே!

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று பிரபலமான ஜூலி அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

author-image
WebDesk
New Update
விஜய் டி.வி-யின் ஹிட் சீரியலில் பிக்பாஸ் ஜூலி : அட்வகேட் கேரக்டராமே!

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் பிக்பாஸ் பிரபலம் ஜூலி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது சீரியல். அதறகு ஏற்ப சீரியல்களில் விறுவிறுப்பான காட்சிகள் அவ்வப்போது ட்விஸ்ட் என பல சீரியல்கள் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அந்த முக்கியமான சீரியல் தென்றல் வந்து என்னை தொடும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றான தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வினோத் பாபு, பவித்ரா ஜனனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

6 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியில் வரும் வெற்றி (வினோத் பாபு) தற்போது கலெக்டராக இருக்கும் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைவாரா என்ற எதிர்பார்ப்புடன் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது பிக்பாஸ் பிரபலம் ஜூலி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று பிரபலமான ஜூலி அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு நெகடீவ் விமர்சனங்கள் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய பிரபலமாக உருவெடுத்தார். அதனைத் தொடர்ந்து மன்னர் வகையறா உள்ளிட்ட சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்த ஜூலி அம்மன் தாயி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இதனிடையே தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில், ஜூலி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். மனைவி மீது கோபத்தில் இருக்கும் வெற்றி குடித்துவிட்டு வீ்ட்டுக்கு வருகிறார். அவரை அழைத்து வரும் ஜூலியிடம் எதற்காக இப்படி செய்கிறாய் என்று கேட்க உங்களால் தான் நான் அட்வகேட் ஆனேன் என்று சொல்வதாக கதை வருகிறது. இந்த சீரியல் மூலம் ஜூலி சின்னத்திரையில் அறிமுகமாகிறார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment