New Update
00:00
/ 00:00
நடிகர் சூர்யாவுடன் ஒருநாள் இருக்க வேண்டும் அவரை எனக்கு கொடுக்க முடியுமா என்று ஒரு ரசிகை வைத்த கோரிக்கைக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. பல விமர்சனங்களை கடந்து பெரிய வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து இந்தி மற்றும் தமிழில் சில படங்களை கைவசம் வைத்துள்ள சூர்யா, பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
மேலும் தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்ட சூர்யா இந்தி படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது மனைவி ஜோதிகா நடிப்பில் சைத்தான் என்ற இந்தி படம் சமீபத்தில் வெளியானது. சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், 18 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வருகின்றனர்.
தங்களது பிஸியான சினிமா வாழ்க்கையில் இருவரும் அவ்வப்போது குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி வருகின்றனர். அதேபோல் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சமூக தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில், தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர். சில சமயங்களில் ரசிகர்களின் கேள்விக்ளுக்கு பதில் அளிக்கும் நிகழ்வுகளும் நடைபெறும். அந்த வகையில் ஒரு. ரசிகரின் கோரிக்கைக்கு ஜோதிகா அளித்துள்ள பதில் தற்போது வைரலாகி வருகிறது.
தனக்குப் பிடித்த நடிகருடன் ஒரு நாளைக் கழிக்க விரும்பிய ஒரு ரசிகை, ஜோதிகாவிடம் ஒரு நாள் சூர்யாவைக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த ஜோதிகா, "அச்சச்சோ, அதற்கு அனுமதி இல்லை என்று பதில் அளித்துள்ளார். திருமணத்திற்கு முன்பு பல படங்களில் ஒன்றாக நடித்திருந்த சூர்யாவும் ஜோதிகாவும் 2006 இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.