Advertisment

இயக்குனராக மாறிய சூர்யா மகள்: விருதுகளை குவித்த ஆவணப்படம்; மனம் திறந்து பாராட்டிய ஜோதிகா!

தனது மகள் இயக்கிய ஆவணப்பம் விருதுகளை குவித்துள்ள நிலையில், இதற்கு நடிகை ஜோதிகா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Surya Daughter

தமிழ் சினிமா நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா ஜோடியின் மகள் தியா லீடிங் லைட் என்ற ஆவணப்படத்தை இயக்கியுளள் நிலையில், இது குறித்து ஜோதிகா, தனது மகளை பாராட்டி தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்து கங்குவா என்ற வரலாற்று படம் வெளியாக உள்ளது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44-வது படத்தில் நடித்து வரும் சூர்யா, சமீபத்தில் வெளியான கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்திருந்த மெய்யழகன் படத்தை தயாரித்திருந்தார்.

சூர்யாவின் மனைவி ஜோதிகா, சூர்யாவுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், திருமணத்திற்கு பிறகு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த தம்பதிக்கு தேவ், தியா என்ற இரு பிள்ளைகள் உள்ளது. சமீபத்தில் சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ள நிலையில், ஜோதிகா இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், சூர்யா – ஜோதிகா தம்பதியின் மகளாக தியா, லீடிங் லைட் (Leading Light) என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம், திரிலோகா சர்வதேச ஃபிலிம்பேர் விருது நிகழ்ச்சியில், பெஸ்ட் ஸ்கிரீன் ரைட்டர், ஸ்பெஷல் ஜூரி விருது, மற்றும் மாணவர் குறும்படம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது சமூகவலைதளஙத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை ஜோதிகா, தனது மகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பொழுதுபோக்குத் துறையில் பெண் எதிர்கொள்ளும் பாகுபாடுகளைப் பற்றிய ஒரு அர்த்தமுள்ள மாணவர் ஆவணப்படத்தை உருவாக்கியதற்காக தியாவை நினைத்து பெருமைப்படுகிறேன். இதைத் தொடருங்கள், இந்த அடிப்படைப் பிரச்சினையை வெளிச்சத்திற்கு கொண்டுவதற்தற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jyothika actor surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment