Actress Kanmani Manoharan New Serial Launch Update : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சில ரோலில் அறிமுகமாகி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகை கண்மணி மனோகரன். இந்த சீரியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து ஜீதமிழ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற அவர், இந்த டிவியின் புதிய சீரியல் ஒன்றில் லீட் ரோலில் நடிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மேலும் இந்த சீரியலுக்கான ப்ரமோ வெளியிடப்பட்டதை தொடர்ந்து ஜூன் மாதம் இதன் ஒளிபரப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் அதன்பிறகு இந்த தொடர் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இந்த சீரியல் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது இந்த தொடர் அடுத்த மாதம் (ஜூன்) தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடரின் டைட்டில் மற்றும் மற்ற நடிகர்களின் விவரங்கள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
அருண் பதமநாபனுடன் அமுதாவாக கண்மணி மனோகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை மட்டுமே தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.அம்மாவின் மறைவால் படிப்பை நிறுத்திய அமுதா, கல்விக்காக ஏங்கும் குணாதிசயங்களை கொண்டவராக ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமுதா தனது படிப்பைத் தொடரவும் தனது கனவுகளை அடையவும் ஒரு ஆசிரியரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள். தன் வாழ்க்கைக்கு ஏற்ற ஆசிரியரையும் துணையையும் அவள் கண்டுபிடிப்பாளா? என்பதே இந்த கதையின் முக்கிய கருவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“