Advertisment

மகனை தொடர்ந்து கணவரும் மரணம்... நடிகை கவிதா வீட்டில் பேரதிர்ச்சி

Actress Kavitha Husband Passed Away : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை கவிதாவின் கணவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

author-image
WebDesk
Jun 30, 2021 16:18 IST
New Update
மகனை தொடர்ந்து கணவரும் மரணம்... நடிகை கவிதா வீட்டில் பேரதிர்ச்சி

Actress Kavitha Husband Death Covid Attack : இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் திரையுலகினரின் உறவினர்கள் பலரும் மரணத்தை சந்தித்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ள இந்த வேளையில், நடிகை கவிதா கொரோனா தொற்று பாதிப்புக்கு தனது கணவரை இழந்துள்ளார்.

Advertisment

தமிழில் 1976-ம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கவிதா.  தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில், தற்போது வரை 350க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தமிழில் கடைசியாக நாரதன் படத்தில் நடித்திருந்தார். தற்போது சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் அவர், திரைப்படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.



இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிய நிலையில், கவிதாவின் குடும்பத்தில் அவரது மகன் மற்றும் கணவர் இருவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கடந்த  இரண்டு வாரங்களுக்கு முன்பு கவிதாவின் மகன் சாய் ரூப் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். தொடர்ந்து கவிதாவின் கணவர் தசரதராஜ் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மகன் இறந்த துக்கத்தில் இருந்த நடிகை கவிதாவுக்கு தற்போது கணவரின் மரணம் பேரிடியாக விழுந்துள்ளது. இரண்டு வார இடைவெளியில் அவரது குடும்பத்தில், கொரோனாவுக்கு மகன் மற்றும் கணவர் உயிரிழந்த சம்பவம் சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கவிதாவின் பேரிழப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment