தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
2/8
ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
3/8
Advertisment
4/8
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள இவர், நடிப்பில் சமீபத்தில் இந்தியில் பேபி ஜான் என்ற படம் வெளியானது. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக் தான் பேபி ஜான்.
5/8
சமீபத்தில், கீர்த்தி சுரேஷ், தனது நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டில் குறித்து சமீபத்தில் தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த பதிவு திரைத்துறையில் உள்ள பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
6/8
தொடர்ந்து கடந்த டிசம்பர் 12-ந் தேதி கோவாவில், பாரம்பரியமான தமிழ் பிராமணர் மற்றும் மலையாளி கிறிஸ்தவ முறைப்படி கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
Advertisment
Advertisement
7/8
திருமணத்திற்கு முன் தினம் இரவு, ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சியில் இருவரும் மகிழ்ச்சியாக நடனமாடியும், காதலைத் தெரிவித்துக் கொண்டும் இருந்துள்ளனர்.இந்த புகைப்படங்களை தற்போது கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
8/8
இதனைப் பார்த்த ரசிகர்கள் விடிந்தால் காதலர் கணவராகிவிடுவார், அதனால் காதலரிடன் லாஸ்ட் நைட் கொண்டாடியுள்ளார். கீர்த்தி, இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள் என வாழ்த்தி வருகின்றனர்.