செம்ம தில்… பட விழாவில் பாட்டிலும் கையுமாக வந்த கீர்த்தி சுரேஷ்!

தசரா படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் மார்ச் 30-ந் தேதி வெளியாக உள்ளது.

Keerthi Suresh
தசரா பட ப்ரமோஷனில் கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ் நடிகர் நானியுடன் தசரா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவர் சரக்கு அடிப்பது போல் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது நானி ஜோடியாக தசரா என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஒடியலா இயக்கியுள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் மார்ச் 30-ந் தேதி வெளியாக உள்ளது.

சந்தோஷ் நாராணயன் இசையமைத்துள்ள தசரா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படக்குழுவினர் தென்னிந்தியாவில் தங்களது ப்ரமோஷன் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், தசரா படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பின்போது, நடிகை கீர்த்தி சுரேஷ் படக்குழுவைச் சேர்ந்த 130 பேருக்கு தலா 10 கிராம் தங்க நாணயங்களை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்திரான நானி, மற்றும் கீர்த்தி சுரேஷூடன் நடிகர் ராணாவும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், தசரா படத்தின் டிரெய்லரில் நடிகர் நானி வாயில் சரக்கு பாட்டிலை வைத்து கையில் எடுக்காமல் குடித்து முடிப்பது போன்ற காட்சி இம்பெற்றுள்ளது. தற்போது ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் நானியை போலவே செய்து காட்டும் வகையில், பாட்டிலுடன் வந்து அதே மாதிரி பாட்டிலில் உள்ளதை குடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

அதன்பிறகு பாட்டிலில் இருந்தது மது அல்ல குளிர்பானம் என்பது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress keerthi suresh dasara movie promotion in mumbai

Exit mobile version