வாத்தி பட இயக்குனர் திருமணம் : க்ளாமர் உடையில் கீர்த்தி சுரேஷ் : வைரல் போட்டோ | Indian Express Tamil

வாத்தி பட இயக்குனர் திருமணம் : க்ளாமர் உடையில் கீர்த்தி சுரேஷ் : வைரல் போட்டோ

வெங்கட் அட்லூரி இயக்கிய ராங் டே என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார்.

வாத்தி பட இயக்குனர் திருமணம் : க்ளாமர் உடையில் கீர்த்தி சுரேஷ் : வைரல் போட்டோ

தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கட் அட்லூரி திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2018-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான துலி ப்ரேமா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் அட்லூரி். தொடர்ந்து,  மிஸ்டர் மஞ்சு, ரிங் டே உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், தற்போது தனுஷ் நடிப்பில் வாத்தி படத்தை இயக்கியுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படத்திற்கு தெலுங்கில் சார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாத்தி படம் வரும் பிப்ரவரி 17-ந் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்பாக பிப்ரவரி 4-ந் தேதி வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

இந்நிலையில், வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கட் அட்லூரிக்கு நேற்று திருமணம் முடிந்துள்ளது. முக்கிய பிரபலங்கள் பங்கேற்ற இந்த திருமண விழாவில் தனுஷ் ஷூட்டிங் இருந்ததால் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த திருமணத்தில் க்ளாமர் உடையில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வெங்கட் அட்லூரி இயக்கிய ராங் டே என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். அப்படத்தின் நாயகன் நிதினுடன், கீர்த்தி சுரேஷ் இந்த திருமணத்தில் கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress keerthi suresh in director venkat atluri wedding