கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது காதலர் ஆண்டனியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது அவர் தனது பெற்றோருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதில் தனது திருமணம் குறித்த அப்டேட்டையும் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துடன் நெற்றிக்கண் படத்தில் நடித்த நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமான இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக ரஜினி முருகன், ரெமோ, உள்ளிட்ட படங்களில் நடித்த நடித்திருந்தார். அதேபோல் விஜய்க்கு ஜோடியாக பைரவா, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக மகாநடி என்ற படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற நிலையில், இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றிருந்தார். தொடர்ந்து மாமன்னன் படத்தில் புரட்சிப்பெண், அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கை, என பல கேரக்டரில் நடித்த கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாக ரகு தாத்தா படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது அட்லி இயக்கத்தில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வௌயன நிலையில், சமீபத்தில், தனது காதலர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், திரையுலக பிரபலங்கள், கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தற்போது தனது சகோதரி ரேவதி சுரேஷ், தந்தை சுரேஷ்குமார், தாய் மேனகா ஆகியோருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு ரசிகர் ஒருவர் அவருக்கு திருப்பதி ஏழுமலையான் படத்தை பரிசாக வழங்கிய நிலையில், தனது பேபி ஜான் திரைப்படம் வெளியாக உள்ளதாகவும், அடுத்த மாதம் தனது திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாகவும் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“