தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை மேனகாவின் மகளாக கீர்த்தி சுரேஷ், ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், விஜய் விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு வெளியான சாணிகாகிதம் படத்தின் மூலம் சோலோ நாயகியாக களமிறங்கினர். அதேபோல் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருதையும் வென்றுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக போலோ சங்கர் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தமிழில் உதயநிதியின் கடைசி படமான மாமன்னன், ஜெயம்ரவியின் சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
Advertisment
Advertisements
கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அவர் தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் அதிபரும், தொழிலதிபருமான தன் நீண்ட நாள் நண்பன் ஃபர்ஹான் பின் லியாகத் என்பருவருடன் மேட்சிங் மேட்சிங் உடையணிந்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவர் தான் உங்கள் காதலனா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் எவ்வித பதிலும் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“