சாணிக்காகிதம் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
ராக்கி படத்தின் மூலம் இயக்குனராக அருண் மாதேஷ்வரன் இயக்கிய படம் சாணிக்காகிதம். கீர்த்தி சுரேஷ், இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
Advertisment
Advertisements
பழிவாங்கும் வகையிலான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அதிகப்படியான ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதில் பொன்னி என்ற போலீஸ் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார்.
தன்னை சீரழித்து தனது குடும்பத்தை அழித்த கெட்டவர்களை பொன்னி தனது அண்ணணுடன் இணைந்து பழிவாங்குவதே இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் அழுக்கு துணியுடன் நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி இன்னுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இது குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ள கீர்த்தி சுரேஷ் ஒன்இயர் ஆஃப் சாணிக்காகிரம் என்ற ஹேஸ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.
நான் எனது அழுக்கு நகங்கள், சப்பல்கள், ஒரு குச்சி காதணி, வேன், சுடலை சங்கையா, பழிவாங்குதல் மற்றும் உணர்ச்சிகள்.
அருண் மாதேஷ்வரனின் படமாக இதை ஆக்குங்கள். இந்த சிறப்பு நாளில் பொன்னி மற்றும் படக்குழுவினரை நினைவு கூறுவதாக பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் நெட்டின்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“