New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Keerthi-2.jpg)
மாமன்னன் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தனது சமூகவலைதளங்களில் மாமன்னன் படத்தை ப்ரமோஷன் செய்து வருகிறார்
மாமன்னன் கீர்த்தி சுரேஷ்
மாமன்னன் படத்தில் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டள்ள மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள படம் மாமன்னன். வடிவேலு உதயநிதி, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் கம்யூனிஸ்ட் ஆதரவாளராக நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், டிரெய்லரில் அவரது காட்சிகள் பாராட்டை பெற்றது.
கடந்த சில தினங்களாக மாமன்னன் படக்குழுவினர் படத்தின் ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது சமூகவலைதளங்களில் மாமன்னன் படத்தை ப்ரமோஷன் செய்து வந்தார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்
அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கருப்பு நிற உடையில் சிகப்பு நிற நூல் வரிகளுடன் உள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் மற்றும் ஆக்ஷன் தொடர்பான படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் மாமன்னன் டிரெய்லரின் கூட சில இடங்களில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருந்தார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ள நிலையில், அடுத்தடுத்து ஆக்ஷன் படங்களுக்கு இவர் தயாராகிவிட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.