தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தனது திருமணம் தொடர்பான பரவி வரும் தகவல்கள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் புதிய தகவலை கூறியள்ளார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அடுத்து அவருடன் இணைந்து ரெமோ, உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், விஜய்க்கு ஜோடியாக பைரவா, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக மகாநடி என்ற படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்த கீர்த்தி சுரேஷ், இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றிருந்தார். இதனையடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த கீர்த்தி சுரேஷ், ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்தே படத்திலும், மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.
மாமன்னன் படத்தில் புரட்சிப்பெண்ணாக இவர் நடித்திருந்தது பலரின் பாராட்டுக்களை பெற்று தந்தது. தற்போது அட்லி இயக்கத்தில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இந்த படத்திற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார். மேலும் இவர் நடித்த ரகுதாத்தா படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே கீர்த்தி சுரேஷ் தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள கீர்த்தி சுரேஷ், பாராட்டுக்களை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வது போல் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எனது குடும்பத்தார், குறித்து நடக்காத விஷயங்களை நடந்தது போல் கதை கட்டுவதை நான் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை. நடிகர் விஜய் சொன்னது போல் உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் உண்மையாகிவிடும் என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“