நான் இறந்த பிறகு ஆவியாக உன்னை சுற்றுவேன் என்று தன்னை மிரட்டியதாக நடிகை குஷ்பு தனது மாமியார் குறித்து பேசியுள்ளார்.
Advertisment
80-90-களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு தற்போது தென்னிந்திய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர், தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். இதனிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை குஷ்பு தனது மாமியார் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக நடிகை குஷ்புவின் குடும்பம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இதில் சமீபத்தில் அவரது மூத்த மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை குஷ்புவின் மாமியார் சந்தித்த நிகழ்வு தொடர்பான தகவல்களும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள இருந்த குஷ்பு தனது மாமியாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தில் பங்கேற்க முடியவில்லை என்று கூறியிருந்த ட்விட்டர் பதிவு கூட நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. அரசியல் எல்லாம் அப்புறம் முதலில் குடும்பத்தை பாருங்கள் மேம் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
Advertisment
Advertisements
குஷ்பு மாமியாருடன் கேப்டன் தோனி
இதனிடையே நேர்காணலில் தனது மாமியார் குறித்து பேசிய குஷ்பு, அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் தீவிர ரசிகை. இப்போது அவருக்கு 88 வயதாகிறது. தோனி விளையாடும் அனைத்து போட்டிகளையும் பார்த்துவிடுவார். தோனி விளையாடவில்லை என்றால் அவர் போட்டியே பார்க்கமாட்டார். அதேபோல் தோன் விளையாடாமல் சென்னை அணி வெற்றி பெற்றாலும் அது தோனியால் தான் நிகழ்ந்தது என்று சொல்லிவிடுவார்.
கடந்த சில வருடங்களாகவே தோனியை பார்க்க வேண்டும் என்று ரொம்ப விருப்பப்படடார். ஆனால் இடையெ கொரோனா லாக்டவுன் உள்ளிட்ட பல பிரச்சனைகளினால் பார்க்க முடியாமல் இருந்தது. அப்போது அவர் எனக்கு 88 வயதாகிறது. தோனியை பார்க்காமல் நான் செத்துவிட்டால் ஆவியாக உன் பின்னால் சுற்றுவேன் என்று சொன்னார். அதனபிறகு ஒருநாள் ஃபிக்ஸ் செய்து தோனியை சந்திக்க ஏற்பாடு செய்தேன். அப்போதும் அவருக்கு தெரியாமல் சர்ப்ரசைாக கூட்டிச்சென்றுதான் காட்டினேன். அப்போது தோனி அவரை பிடித்து உள்ளே அழைத்து சென்றது, தோனிக்கு அவர் முத்தம் கொடுத்து எல்லாம் மகிழ்ச்சியாக பேசினார்.
இந்த சந்திப்பில் தோனி நீங்கள் எல்ல மேட்சும் பாருங்கள் என்று சொல்ல நீ விளையாடினால் நான் அனைத்து மேட்சும் பார்ப்பேன் என்று சொன்னார் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil