Advertisment

பிரபல நடிகர் பிறந்த நாள்: டான்ஸ் ஆடி கொண்டாடிய குஷ்பு- வீடியோ

கடந்த 1988-ம் ஆண்டு வெளியான ரணதீரா என்ற படத்தின் மூலம் நடிகை குஷ்பு கன்னடத்தில் அறிமுகமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Kushboo

நடிகை குஷ்பு

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு பிரபல நடிகரின் பிறந்த நாளுக்காக செம்ம ஆட்டம் போட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

80-90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் குஷ்பு. ரஜினிகாந்த் பிரபு இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான குஷ்பு, தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

Kushboo Ravichandran

நடிகர் ரவிச்சந்திரன் - நடிகை குஷ்பு

அந்த வகையில் கடந்த 1988-ம் ஆண்டு வெளியான ரணதீரா என்ற படத்தின் மூலம் நடிகை குஷ்பு கன்னடத்தில் அறிமுகமானார். பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரன் நாயகனாக நடித்திருந்த இந்த படம் கன்னட சினிமாவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தின் மூலம் கன்னடத்தில் குஷ்புவுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவாகும் அளவுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் பல படங்களில் நடித்திருந்த குஷ்பு கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு வெளியான நானல்லா என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் ரணதீரா படத்தை தொடர்ந்து ரவிச்சந்திரனுடன் 3 படங்களில் இணைந்து நடித்த குஷ்பு அவரின் பிறந்த நாளான இன்று செம்ம ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ரவிச்சந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, தான் கன்னட ரசிகர்களுக்கு நிறைய கடமைபட்டுள்ளதாகவும், ரணதீரா படத்தின் மூலம் தனக்கு கன்னடத்தில் அதிகமான ரசிகர்கள் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். இதனிடையே குஷ்புவின் நடனத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் 50-வயதை கடந்தாலும் குஷ்பு நன்றாக நடனமாடுகிறார் என்று கூறி வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Kushboo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment