scorecardresearch

நோயில் சிக்கிய முதல் கணவருக்கு உதவியதால் 2-ம் கணவருக்கு வந்த கோபம்: குட்டி பத்மினி வாழ்வில் இவ்வளவு சோகமா?

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள குட்டி பத்மினி ஏராளமாக டிவி தொடர்களில் நடித்துள்ளார்.

Kutty Padmini
Actress Kutty Padmini

முதல் கணவரை பிரிந்த பின் அவருக்கு மீண்டும் உதவி செய்ததால் தனது 2-வது கணவரால் பல பிரச்சனைகள் வந்தது என்று நடிகை குட்டி பத்மினி மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தற்போது திரைப்படம் டிவி உள்ளிட்ட அனைத்திலும் நீடித்து வருபவர் குட்டி பத்மினி. கடைசியாக தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான உத்தரவு மகராஜா என்ற படத்தில் நடித்திருந்த இவர்., தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள குட்டி பத்மினி ஏராளமாக டிவி தொடர்களில் நடித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த குட்டி பத்மினி தனது சினிமா வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

3 வயது குழந்தையாக இருக்கும்போது நடிக்க வந்தேன். குழந்தையும் தெய்வமும் படம் நடிக்கும்போது எனக்கு 8 வயது. அப்போது கேரவன் கிடையாது. அனைவரும் மர நிழலில் தான் அமர்ந்திருப்பார்கள். எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்ட பலரும் அப்படி தான் இருப்பார்கள். இதனால் ஷூட்டிங் என்றாலே ஜாலியாக இருக்கும்.

சினிமாவில் பல துரோகங்களை சந்தித்துள்ளேள். சினிமாகார்களுக்கு வெளியில் கடன் தரமாட்டார்கள். அதனால் சன்டிவியில் நான் செய்த பிராஜக்ட்டுக்காக மார்வாடியிடம் கடன்வாங்கினேன். இதற்கிடையில் நான் குட்டி பத்மினி கணவன் இல்லை என் மனைவிதான் குட்டி பத்மினி என்று சொல்ல வேண்டும் என என் கணவர் வேறு ஒரு பக்கம் பிரச்சனை.

காதல் கணவர்தான் என்றாலும் அவருக்காக பல விஷயங்களை விட்டுக்கொடுத்தேன். இதனால் திரைத்துறையில் சிறிய இடைவெளி விட்டேன். ஆனால் என்னை நம்பி நிறையபேர் இருந்ததால் மீண்டும் எனது பணியை தொடர்ந்தேன். அதேபோல் எனது இரண்டாவது கணவரை பிரிந்தபின் முதல் கணவருக்கு உதவியதில் சில காரணங்கள் இருக்கிறது.

21 வயதில் ஒரு டிவி சீரியலில் நடித்தேன். அப்போதுதான் முதன் முதலில் முதியோர் இல்லத்தை பார்த்தேன். அதன்பிறகு சினிமா துறையில் உள்ளவர்களுக்காக முதியோர் இல்லம் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். பலருக்கும் உதவும் எண்ணம் இருந்த எனக்கு என் முதல் கணவருக்கு உதவும் எண்ணம் இருக்க கூடாதா? அவரை எப்படி கவனிக்காமல் இருக்க முடியும்? என்னதான் இருந்தாலும் என் முதல் கணவர் அவருடன் வாழ்ந்திருக்கிறேன்.

என் குழந்தைக்கு அவர் அப்பா. என் மகள் அமெரிக்காவில் இருந்து போன் செய்து அப்பாவுக்கு அடிப்பட்டிருக்கு என்று சொன்னாள்.உடனடியாக அவரை சந்தித்து மருத்துவமனையில் சேர்த்தேன். அவர் கொஞ்சம் குடிக்கு அடிமையாக இருந்ததால் எங்கள் அலுவலகத்திற்கு கீழே உள்ள அறையில் அவரை தங்க வைத்து பார்த்துக்கொண்டேன். அப்போதான் என் 2-வது கணவரை பிரிந்திருந்தேன்.

ஊர் என்ன சொன்னாலும் இப்போதான் 2-வது கணவரை பிரிந்திருக்கிரீர்கள் கொஞ்சம் யோசிங்க என்று என் ஊழியர்கள் சொன்னார்கள். என்னை விட்டு போனவர் என்னை தப்பா நினைத்தால் என்ன நினைக்கவில்லை என்றால் என்ன? நான் அதை பொருட்படுத்தாமல் என் முதல் கணவருக்கு ரூம் கொடுத்தேன். அவருக்கு மாதம் ரூ 30 ஆயிரம் பணம் செலவுக்கு கொடுத்தேன். அட்மின் வேலை கொடுத்தேன். தினமும் வருவார் தனி கேபின் கொடுத்தேன்.

என்னுடைய 2-வது கணவர் ஒருநாள் போன் செய்தார். என் முதல் கணவர் வந்துவிட்டார் போல சந்தோஷமா என்று கேட்டார். ஆமாம் உங்களுக்கு என்ன வயிற்று எரிச்சல் என்று கேட்டேன். உடனே அருகில் இருந்த என் மகள் எப்படி அம்மாவை இப்படி கேட்கலாம் அவருடன் சண்டை போட்டாள் என குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress kutty padmini says about her marriage life