தான் இறந்த பிறகு தனது சொத்தக்கள் அனைத்தும் தனது ஊழியர்களுக்குதான் சேரும் என்று நடிகை குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பின்னாளில் பல படங்களில் நாயகியாக நடித்தவர் குட்டி பத்மினி. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள இவர், பல சின்னத்திரை சீரியல்களை தயாரித்துள்ளார். கடைசியாக தென்பாண்டி சிங்கம் என்ற சீரியலை தயாரித்த குட்டி பத்மினி தற்போது வெப் சீரிஸ்களை தயாரித்து வருகிறார்.
மேலும் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி தனது வாழ்க்கை வரலாறு குறித்து பேசி வரும் குட்டி பத்மினி, பல விஷங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், எனக்கு 21 வயது இருக்கும்போது எனது அம்மாவின் பிடிவாதத்தால் திருமணம் செய்துகொண்டேன். அப்போது காதல் பற்றி எனக்கு தெரியாது. ஆனாலும் என் முதல் திருமணம் சரியில்லாமல் போனது.
அதன்பிறகு 35 வயதில் பிரபு என்பரை சந்தித்தேன். காதல், திருமணம் வாழக்கை என்பது பற்றி தெரிந்துகொண்ட அந்த வயதில் அவருக்காக அவருடைய காதலுக்காக தற்கொலை செய்யும் முடிக்கு கூட சென்றேன். இப்போது அதை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. திருமணம் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று அம்மா செய்த தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள் என்று என் மகள்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
நான் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் என் மகள்களுக்கு அதில் விருப்பம் இல்லை. எங்களுக்காக எதையும் செய்யாதீர்கள் நாங்கள் யாரும் உங்கள் நிறுவனத்தை எடுத்து நடத்தமாட்டோம் என்று கூறிவிட்டார்கள். இதனால் எல்லாவற்றையும் விற்கு கடனை அடைத்துவிட்டு தற்போது நிம்மதியாக இருக்கிறேன். இப்போது நான் சம்பாதிப்பதை என் ஊழியர்களுக்கு பிரித்து கொடுக்க விரும்புகிறேன்.
மேலும் நான் இறந்த பிறகு என் புத்தகங்கள் சென்னை சிறைச்சாலைக்கும், என் புடவைகள் நாடக கம்பெனிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துவிட்டேன். என் கடைசி நாளில் என் பெயரில் நிறுவனத்தில் என்ன இருக்கிறதோ அவை அனைத்தும் ஊழியர்களுக்குதான் சொந்தம். அதில் கடன் எதாவது இருந்தால் அதை என் பிள்ளைகள் அடைப்பார்கள். வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்குதான் சொத்து. இந்த உலகத்தை விட்டு சீக்கிரம் போய்விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சொத்து தேவையில்லை என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“