மற்றவர்களின் கழிப்பறையை நான் சுத்தம் செய்ய மாட்டேன்: பிக்பாஸ் பற்றி லட்சுமி மேனன்

கழிவறையும் நான் தான் சுத்தம் செய்கிறேன். ஒரு கேமராவுக்கு முன்னால் நான் அதை செய்ய விரும்பவில்லை

கழிவறையும் நான் தான் சுத்தம் செய்கிறேன். ஒரு கேமராவுக்கு முன்னால் நான் அதை செய்ய விரும்பவில்லை

author-image
WebDesk
New Update
Lakshmi Menon's Kuchi Pudi Dance video goes viral

லட்சுமி மேனன்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் சீசன் 4 வரும் அக்டோபர் 4 முதல் ஒளிபரப்பவுள்ளதாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக தெரிவித்தது. இந்நிலையில், லக்ஷ்மி மேனன் பிக் பாஸ் குறித்த தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisment

லக்ஷ்மி மேனன் தனது ட்விட்டர் பதிவில்,"பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. மற்றவர்கள் சாப்பிட்ட தட்டுகளையும், அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளையும் நான் எப்போதும் சுத்தம் செய்யப்போவதில்லை. நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன் சண்டையிடவும் நான் தயாராக இல்லை. இதன் பிறகும் சில கேவலமான நிகழ்ச்சியில், நான் கலந்துகொள்ள இருப்பதாக வரும் வதந்திகளை யாரும் கருத்தில் கொள்ளமாட்டார்கள் என்று நம்புறேன்" என்று தெரிவித்தார்.

 

Advertisment
Advertisements

லக்ஷ்மி மேனனின் இந்த கடுமையான வார்த்தைகளுக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. கழிவறையை சுத்தம் செய்பவர்கள் குறித்து லக்ஷி மேனனின் கருத்து தான் என்ன? என்ற கேள்வியை பலர் முன்வைத்தனர்.

அதற்குப் பதிலளித்த அவர் , "எனவே, பதிவைப் பார்த்த பிறகு பலரும் எதிர்மறையான செய்திகளை அனுப்பி வருகின்றனர். நீங்கள் என்னை கேள்வி கேட்கும் இடத்தில் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  கருத்து சுதந்திராம் எனது அடிப்படை உரிமை. பல காரணங்களினால் நான் இந்த நிகழ்ச்சியை விரும்பவில்லை. வீட்டில் உபயோகப் படுத்துகின்ற  தட்டுகளையும், கழிவறையும் நான் தான் சுத்தம் செய்கிறேன். ஒரு கேமராவுக்கு முன்னால் நான் அதை செய்ய விரும்பவில்லை " என்று தெரிவித்தார்.

Bigg Boss Tamil Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: