தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் லாவண்யா தேவி, 43 வயதில் திருமணம் செய்துகொண்ட நிலையில், இதற்காக காரணம் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
1997-ம் ஆண்டு வெளியான சூரியவம்சம் படத்தில் செப்னா என்ற கேரக்டரில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை லாவண்யா தேவி. அதன்பிறகு படையப்பா, சுயம்வரம், சங்கமம், சேது, திருமலை தெனாலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக 2014-ம் ஆண்டு வெளியான விவேக்கின் நான்தான் பாலா என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்காத லாவண்யா தேவி, 9 வருட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டு வெளியான பாகசூரன் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் சன்டிவியின் அருவி சீரயிலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் லாவண்யா தேவிக்கு தற்போது 43 வயதாகும் நிலையில், சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார். இத்தனை ஆண்டுகள் இவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே தான் 43 வயதில் திருமணம் செய்துகொண்டது குறித்து பேசியுள்ள நடிகை லாவண்யா தேவி, இந்த வயதில் நான் திருமணம் செய்துகொள்ள என் குடும்ப சூழ்நிலை தான் காரணம். எனக்கு பெரிய அளவில் வருமானம் இல்லாதததால், அடுத்தடுத்து வேலைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தேன். என் குடும்பத்தினரும் எனக்கு ரொம்பவே சப்போர்ட்டாக இருந்தார்கள்.
இந்த நேரத்தில் தான் எனது கணவரை ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்படியோ அவருடன் நட்பாக பழகியதை தொடர்ந்து இந்த நட்பு காதலாக மாறி தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது என்று கூறியுள்ளார். லாவண்யா தேவியின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“