திருமணமாகி 11-வது நாளில் விதவை; 20 வயது மூத்த நடிகருடன் 2-வது திருமணம்: இந்த நடிகைக்கு இரண்டுமே நிலைக்காத சோகம்!

லீனா பிறந்த ஆண்டான 1950-ம் ஆண்டு கிஷோர்குமாருக்கு, ரூமா கொஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 1960-ம் ஆண்டு மதுபாலா என்பரை திருமணம் செய்தார்.

லீனா பிறந்த ஆண்டான 1950-ம் ஆண்டு கிஷோர்குமாருக்கு, ரூமா கொஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 1960-ம் ஆண்டு மதுபாலா என்பரை திருமணம் செய்தார்.

author-image
WebDesk
New Update
Leena Chnadavaerk

சினிமா துறையில் நட்சத்திரங்கள் அனைவருக்கும் சிறப்பான வாழ்க்கை அமையுமாக என்பது கேள்விக்குறித்தான். குறிப்பாக நடிகைகள், திருமண வாழ்க்கையில், பல்வேறு விதமான இன்னல்களை சந்தித்துள்ளனர். இதற்கு முக்கிய உதாரணமாக நடிகை ஸ்ரீவித்யா போன்ற நடிகைகளை சொல்லலாம். ஆனால் ஸ்ரீவித்யா திரையில், புன்னகையுடன் தான் இருந்திருக்கிறார்.

Advertisment

ஸ்ரீவித்யாவின் அளவுக்கு திருமண வாழ்க்கையில் இன்னல்களை சந்திக்கவில்லை என்றாலும் இவரது திருமண வாழ்க்கையே பல சோகங்களை அடங்கியது தான். இந்த நடிகை திருமணம் செய்த 11-வது நாளில் அவரது கணவர் மரணடைந்துவிட்டார். அந்த நடிகையின் பெயர் நடிகை லீனா சந்தவார்கர். கடந்த 1970-80-களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக பல வெற்றிப்படங்களை கொடுத்த இந்த நடிகை தென்னிந்தியாவை சேர்ந்தவர்.

1950-ம் ஆண்டு கர்நாடகாவின், தர்வாட் பகுதியில் ராணுவ வீரர் குடும்பத்தில் மகளாக பிறந்த இவர், மன் கா மீத் என்ற பாலிவுட் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். சோம் தத் இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், லீனாவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. குறிப்பாக அப்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இவரை புக் செய்துள்ளனர்.

அந்த வகையில், ராஜேஷ் கண்ணா, திலீப் குமார் ஆகியோருடன் நடித்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த லீனா, தான் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்திலேயே, சித்தார்த் பண்டேட்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இந்த ஜோடிக்கு 1975-ம் ஆண்டு திருமணமும் நடந்து முடிந்துள்ளது. அரசியல் குடும்பத்தை சேர்ந்த சித்தார்த் பண்டேட்கர் கோவாவின் முதல் முதல்வராக இருந்த பண்டேட்கரின் மகன்.

Advertisment
Advertisements

24 வயதில் சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்தில் முதலமைச்சர் மகனுடன் திருமணம், ஆடம்பர வாழ்க்கை என பல்வேறு கனவுகளுடன் திருமண வாழ்க்கையை தொடங்கிய லீனாவுக்கு அவர் கனவுகளை சிதைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து 11-வது நாளில் லீனாவின் கணவர் சித்தார்த் பண்டேட்கர் துப்பாக்கியை துடைத்துக்கொண்டு இருக்கும்போது எதிர்பாராதவிதமாக வெடித்தததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருமணமாகி 11-வது நாளில் விதவையான லீனா, மீண்டும் தனது தாய் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

Leena Chnadavaerk1

இதன் காரணமாக அவர் ராசியில்லாத பெண் என்ற முத்திரை குத்தப்பட்ட நிலையில், லீனா மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். 1975-ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ரீ-என்ட்ரி படமான பைராக் தோல்விப்படமாக அமைந்தது. வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த லீனாவுக்கு திருமணத்திற்கு பின் முதல் படமே தோல்வி ஆனாலும், அவருக்கான வாய்ப்புகள் அப்படியே தான் இருந்தது. தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கிய லீனா, நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முற திறமை கொண்ட கிஷோர் குமாருடன் காதலில் விழுந்தார்.

லீனாவை விடவும் 20 வயது மூத்தவர் என்றாலும், கிஷோர் குமார் 3 முறை விவாகரத்தாவனர். லீனா பிறந்த ஆண்டான 1950-ம் ஆண்டு கிஷோர்குமாருக்கு, ரூமா கொஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 1960-ம் ஆண்டு மதுபாலா என்பரை திருமணம் செய்தார். லீனாவுக்கு முதல் திருமணம் நடந்த அடுத்த ஆண்டு (1976) கிஷோர் குமார் 3-வது திருமணமாக யோகிதா பாலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த திருமணம் 1978-ம் ஆண்டு பிரிந்தனர்.

3-முறை விவாகரத்து ஆனவர் என்பதால், இந்த திருமணத்திற்கு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதையும் மீறி அவரை திருமணம் செய்துகொண்ட லீனாவுக்கு அந்த வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. 1980-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், 7 ஆண்டுகள் கழித்து கிஷோர்குமார் மரணமடைந்தார். 37 வயதில் மீண்டும் விதவையான லீனா, தனது ஒரு மகனுடன் வசித்து வந்த நிலையில், 70-வயதை கடந்துவிட்ட லீனா, 1989-ம் ஆண்டு, மம்தா கீன் சச்னா மெயின் என்ற படத்தில் நடித்திருந்தார். இதுவே அவரின் கடைசி படம்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: