Advertisment

நெருங்கி வந்த தமன்னா... விட்டுக்கொடுக்காத த்ரிஷா : 2023-ல் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகை யார்?

சமீபத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து தற்போது கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகைகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Trisha Tamannah

த்ரிஷா தமன்னா

2023-ம் ஆண்டு முடிவடைய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் டாப் லிஸ்ட் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து தற்போது கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகைகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

2023-ம் ஆண்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளாக தரிஷா தமன்னா உருவெடுத்துள்ளனர். இருவருமே தொடர் தோல்விகளுக்கு பின் மீண்டும் தங்களது இடத்தை பிடித்திருந்தாலும், இதில் த்ரிஷா தமன்னாவை விட முன்னிலையில் உள்ளார். அதே சமயம் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவாலா பாடல் மூலம் தமன்னா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார்.

ஆண்டின் தொடக்கத்தில் த்ரிஷா முன்னணியில் இருந்தாலும், இறுதிக்கட்டத்தில் காவாலா பாடல் மூலம் தமன்னா அவரை நெருங்கினார். ஆனால் முந்த முடியவில்லை. இது குறித்து த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நன்றி தெரிவித்த நிலையில், ‘த்ரிஷா எராஎன்ற ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

2023-ம் ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ என இரு பெரிய படங்களில் நடித்திருந்த த்ரிஷா தற்போது அஜித்துடன் விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் கமல்ஹாசனின் தக்லைஃப் என்ற படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார். ஒரு தசாப்தத்திற்கு முன்பு, த்ரிஷா தனது சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது, 1.5 கோடி ரூபாய்க்கு சம்பளம் கேட்டிருந்தார்.

தற்போது, கமல்ஹாசன், அஜித் மற்றும் பிற முன்னணி நடிகர்களுடன் இணைந்துள்ள த்ரிஷாவுக்கு, தளபதி விஜயின் லியோ படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், தற்போது அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இதில் சில ஆதாரங்கள் ரூ 4 கோடி என்று குறிப்பிடுகையில், அவருக்கு கணிசமான ரூ 12 கோடி வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது.

2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் தொடர்ச்சியான வெற்றிகள் மற்றும் பிளாக்பஸ்டர் படங்கள் கவனத்தை ஈர்த்தது. சமீபத்திய கூகுள் தேடல் தகவலின்படி, தமிழ் திரையுலகில் அதிகம் தேடப்பட்ட ஆளுமையாக தளபதி விஜய் இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trisha Tamannah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment