/tamil-ie/media/media_files/uploads/2022/12/Madhuvanthi.jpg)
நடிகை மதுவந்தியின் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் வீட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை ஏலம் விட்ட நிலையில், அந்த வீட்டில் இருந்த 30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்டு தரக்கோரி மதுவந்தி புகார் அளித்துள்ளார்.
சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தர்மதுரை படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் மதுவந்தி. பழம்பெரும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான இவர், ஒரு சில படங்ககளில் நடித்திருந்த நிலையில், ராதிகாவுடன் வாணி ராணி சீரியலில் நடித்திருந்தார். பாஜகவில் செயற்குழு உறுப்பினராக உள்ள இவர், தற்போது சென்னை தீ நகர் நியூ கிரி சாலையில் உள்ள குடியிறுப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், மதுவந்திக்கு சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் சாலையில் சொந்தமாக குடியிருப்பு வைத்திருந்தார். இந்த குடியிருப்பை வைத்து கடந்த 2016-ம் ஆண்டு தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றிடம் கடன் பெற்றுள்ளார். இந்த கடனுக்கான ஒரு கோடியே 21 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை கட்ட தவறியதால், அந்த பைனான்ஸ் நிறுவனம் மதுவந்தியின் ஆழ்வார்பேட்டை வீட்டை நீதிமன்றத்தின் மூலம் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டது.
தொடர்ந்து இந்த வீட்டில் இருந்த பொருட்களை ஒருமாத காலத்திற்குள் எடுத்துக்கொள்ள மதுவந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், காலக்கெடு கொடுக்கப்பட் நாட்களில் அவர் பொருட்களை எடுத்துக்கொள்வில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டில் இருந்த பொருட்களை பைனாஸ் நிறுவனம் தனது சொந்தமான இடத்திற்கு மாற்றிவிட்டு வீட்டை கடந்த 14-ந் தேதி ஏலத்தில் விட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மதுவந்தி தான் ஊரில் இல்லாத நேரத்தில், பைனான்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தனது வீட்டை ஏலம் விட்டுள்ளனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவன மண்டல மேலாளர் உள்ளிட்ட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வீட்டில் இருந்த தனக்கு சொந்தமான 30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்டு தர கோரியும் மதுவந்தி சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞர் மூலம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.