scorecardresearch

நிறம் மாறிக்கிட்டே இருக்கு… நடிகை மம்தா மோகன்தாசுக்கு விட்டிலிகோ நோய்!

குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

நிறம் மாறிக்கிட்டே இருக்கு… நடிகை மம்தா மோகன்தாசுக்கு விட்டிலிகோ நோய்!

வீட்டிலிகோ என்ற சரும நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தனது சரும நிறம் மாறிக்கொண்டே வருவதாகவும் நடிகை மம்தா மோகன் தான் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மயோக்கம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். அதன்பிறகு மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள இவர், 2006-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாக சிவப்பதிகாரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் ஊமை விழிகள், கருமேகங்கள் களைகின்றன என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மம்தா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர், தனது ஆட்டோ இம்யூன் எனப்படும் விட்டிலிகோ நோய் இருப்பதாகவும், இதனால் தன்னுடைய நிறம் மாற்றம் அடைந்து வருவதாகவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விட்டிலிகோ என்பது தோலின் நிறத்தை இழக்க செய்யும் ஒரு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டால் அவர்கள் தோல் நிறம் இழக்கும்.

கை கால் உதடு முடி என உடலின் எந்த பாகத்திலும் இந்த நோயினால் நிறத்தை இழக்கலாம். இந்நோய்க்கு சிகிச்சை இல்லை என்றாலும் நிற மாற்றத்தை தடுக்க சிகிச்சைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress mamta mohandas shares autoimmune disease vitiligo on insta

Best of Express