Advertisment

சீனு ராமசாமி என்னை நடத்திய விதம்; காரணம் இதுதான்: நடிகை மனிஷா யாதவ் காட்டம்

இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவ்க்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மனிஷா யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Seenu ramasamy Manisha

சீனு ராமசாமி - மனிஷா யாதவ்

இடம் பொருள் ஏவல் திரைப்பட படப்பிடிப்பின்போது இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவ்க்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மனிஷா யாதவ் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

Advertisment

சினிமா விமர்சகரும் பத்திரிக்கையாளருமான வலைப்பேச்சு பிஸ்மி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் படப்பிடிப்பில், அந்த படத்தில் நடித்து வந்த நடிகை மனிஷா யாதவ்க்கு இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்தார். இதற்காக ஆதாரங்கள் என்னிட்டம் இருக்கிறது என்று கூறியுிருந்தார். இந்த பேச்சு திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மனிஷா யாதவ் தனக்கு நன்றி சொன்ன ஒரு வீடியோ க்ளிப்பை வெளியிட்டு எங்களுக்குள் இந்த பிரச்சனை இருந்திருந்தால் அவர் ஏன் ஒரு குப்பை கதை நிகழ்ச்சியில் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும், என்னுடைய அடுத்த படத்தில் மனிஷா யாதவ் நடிப்பார் என்றும் சீனுராமசாமி கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு உடனடியாக பதில் அளித்திருந்த மனிஷா யாதவ், நான் இப்போது சீனு ராமசாமியின் எந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன்? அன்று நான் நன்றி சொன்னது மேடை நாகரிகம் காரணமாக சொன்னேன். மற்றபடி 9 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன வார்த்தை தான் உண்மை என்று சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதை உறுதி செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த சீனு ராமசாமி ஆண்னை நீக்கினால் சிறந்த இயக்குனர் பெண்களை நீக்கினால் பாலியல் பழியா என்று கேட்டிருந்தார்.

இதனிடையே சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மனிஷா யாதவ், கடந்த வாரம் சீனு ராமசாமி அலுவலகத்தில் இருந்து எனக்கு ஒரு கால் வந்தது. ஒரு புதிய படத்தில் முக்கிய கேரக்டர் இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் பேசியது எனக்கு விநோதமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளாக தொடர்பு இல்லாமல் திடீரென ஏன் எனக்கு போன் செய்ய வேண்டும் என்று தோன்றியது. இடம் பொருள் ஏவல் படத்தில் அவர் என்னை நடத்திய விதம், என்னை படத்தில் இருந்து நீக்கியதால் அவர் படத்தில் நடிக்க நான் விரும்பவில்லை.

இது எல்லாவற்றிற்கும் காரணம் நான் அவரிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளவில்லை என்பது தான். அவர் செய்த எல்லாவற்றிற்கும் நான் ஒத்துழைக்கவில்லை. அந்த படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டு உடனடியாக வேறு ஒரு பெண்ணை நடிக்க வைத்திருந்தார். அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இல்லை என்று நீக்கினால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒருவர் எனக்கு எல்லாவிதமாக குப்பைகளை மெசேஜ் செய்வதை நான் விரும்பவில்லை.

ஒரு குப்பை கதை பட விழாவில் நான் அனைவருக்குமே நன்றி சொன்னதால் அவருக்கும் சேர்த்து சொன்னேன். நலல மனம் கொண்ட பெரிய இயக்குனர்களிடம் நான் பணியாற்றி இருக்கிறேன். திறமையானவர்களாக இருந்தும் தார்மீக உணர்வுகள் இல்லாத எவரையும் நான் மதிப்பதில்லை. எனது கணவர் குடும்பத்தினர் இந்த துறையில் இருக்கும் எனது நலம் விரும்பிகள் ஆகியோரது ஆதரவு இருப்பதால் கடவுளுக்கு நன்றி. எந்த ஒரு பெண்ணும் மீண்டும் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Seenu Ramasamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment