தமிழத்தில் பிறந்தாலும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்திருப்பவர் மஞ்சு வாரியார். மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மூலம் மஞ்சு வாரியார் தமிழில் அறிமுகமானார்.
அசுரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்த மஞ்சு வாரியார் அடுத்து, அஜித்தின் துணிவு படத்தில் நாயகியாக நடித்திருந்தார். துணிவு படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் பிரபலமான இவர், தற்போது மிஸ்டர் எக்ஸ், ரஜினிகாந்தின் வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
1995-ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான மஞ்சுவாரியார், 1998-ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, மீனாட்சி என்ற ஒரு மகள் உள்ள நிலையில், 16 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் திலீப்பை விவாசரத்து செய்த மஞ்சுவாரியார் தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.
மேலும் மஞ்சுவாரியாரின் மகள் மீனாட்சி அவரது அப்பா திலீப்புடன் வசித்து வரும் நிலையில், தற்போது அவர், சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து முடித்துள்ளார். அவர் பட்டம் பெறும்போது தனது அப்பா திலீப்புடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மஞ்சு வாரியாருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“