90களின் இறுதியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா தற்போது திருமணமாகி கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 பெண் ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இதனிடையே நேற்று ரம்பா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்த விபத்தில் அவரது 3 குழந்தைகளும் காயமடைந்த நிலையில், ஷாசா என்ற குழந்தை பலத்த காயத்துடன் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரம்பா, பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்துச்செல்லும்போது எங்களது கார் மற்றொரு காருடன் மோதி விபத்தக்குள்ளானது.
இதில் குழந்தைகளுடன் நானும் என்னுடன் பயணித்தவரும் சிறிய காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால் குழந்தை ஷாசா பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் சக நடிகைகள் ரம்பாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் ரம்பாவின் பதிவுக்கு பதில் அளித்துள்ள நடிகை மீனா, அடக்கடவுளே... ஜெயம்மா பாதுகாப்பாக இரு. கவலைப்பட வேண்டாம் ஷாசா விரைவில் குணமடைந்து திரும்புவார். உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து நடிகையும் அரசியல்வாதியுமாக காயத்ரி ரகுராம், டேக் கேர் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிகை ரம்பா மற்றும் அவரது குழந்தை விரைவில் நலம் பெற வேண்டும் என்றும், கவலைப்பட வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“