மீனாவுக்குள் இப்படி ஒரு திறமையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பாடகியாக அசத்தல்

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் மீனா

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் மீனா

author-image
WebDesk
New Update
Meena

நடிகை மீனா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகையாக உயர்ந்த மீனா,  திரைத்துறையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் பாடல் பாடியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

1982-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. தொடர்ந்து எங்கேயோ கேட்ட குரல், திருப்பம், அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, 1990-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான நவயுகம் என்ற படத்தின் மூலம் நாயகியாக உயர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து ஒரு புதிய கதை என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான மீனா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள மீனா தற்போது முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் திரையுலகில் தனது 40 ஆண்டு கால பயணத்தைகொண்டாடும் வகையில் மீனா 40 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். தற்போது கேரக்டர் நடிகையாக உருவெடுத்துள்ள மீனா, மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து் த்ர்ஷ்யம் மற்றும் த்ர்ஷயம் 2 என இரு வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார்.

Advertisment
Advertisements

அதேபோல் தமிழில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் கணவர் வித்யாசகரின் மரணம் நடிகை மீனாவை சில மாதங்கள் வீட்டில் முடங்கிய நிலையில், தற்போது சக நடிகைகளின் ஆதரவோடு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் நடுவராக பங்கேற்றுள்ள மீனா, போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், நிகழ்ச்சியின் சிறப்பாக மேடையேறிய நடிகை மீனா, எஜமான் படத்தில் ரஜினியுடன் பாடிய டூயட் பாடலான ஆலப்போல் வேலப்போல் என்ற பாடலை கியூட்டாக பாடி அசத்தினார். இதில் பாடகர்கள் மனோ, சித்ராவும் மீனாவுடன் இணைந்து பாடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாடலை சிறப்பாக பாடி முடித்த மீனாவிற்கு சித்ரா பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Meena

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: