Advertisment

இன்னொரு திருமணம்... கணவர் பாலு மகேந்திராவுக்கு சத்தியம் செய்ய மறுத்த நடிகை மவுனிகா

சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர், படத்தொகுப்பாளர், என பன்முக திறமை கொண்ட பாலுமகேந்திரா தான் பணியாற்றி படங்களுக்காக பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Balu Mahendra Mounika

இயக்குனர் பாலு மகேந்திர - மவுனிகா

இயக்குனர் பாலுமகேந்திரா இறக்கும் நிலையில், இருந்தபோது தன்னிடம் 2 சத்தியம் செய்ய சொன்னதாக அவரது மனைவியும் நடிகையுமான மவுனிகா தெரிவித்துள்ளார்.

Advertisment

இலங்கை தமிழர் என்ற அடையாளத்துடன் தென்னிந்திய சினிமாவில் வெற்றி நாயகனகாக வலம் வந்தவர் பாலுமகேந்திரா. 1972-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பணிமுடக்கு என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இவர், 1977-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கோகிலா படத்தின மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர், படத்தொகுப்பாளர், என பன்முக திறமை கொண்ட பாலுமகேந்திரா தான் பணியாற்றி படங்களுக்காக பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, ரெட்டை வால் குருவி, வீடு, மறுபடியும், ஜூலி கனபதி, அது ஒரு கனாக்காலம் உள்ளிட்ட படங்கள் அவரின் அடையாளமாக உள்ளன.

கடைசியாக சசிகுமார் தயாரிப்பில் தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்திருந்த பாலுமகேந்திரா கடந்த 2014-ம் ஆண்டு மரணமடைந்தார். 1963-ம் ஆண்டு அகிலேஸ்வரி என்பரை திருமணம் செய்துகொண்ட பாலுமகேந்திரா, 1978-ம் ஆண்டு நடிகை ஷோபாவை திருமணம் செய்துகொண்டார். இதில் ஷோபா 1980-ம் ஆண்டு மரணமடைந்தார்.  தொடர்ந்து 1994-ம் ஆண்டு நடிகை மவுனிகாவை 3-வது திருமணம் செய்துகொண்டார் பாலுமகேந்திரா.

பாலுமகேந்திரா இயக்கிய உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மவுனிகா தொடர்ந்து, பாலுமகேந்திராவின் இயக்கத்தில் யாத்ரா, ரெட்டைவால் குருவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு வண்ண வண்ண பூக்கள் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அவரை நாயகியாக அறிமுகப்படுத்தியதும் பாலுமகேந்திரா தான்.

பாலுமகேந்திர – மவுனிகா இடையே 30 வயது வித்தியாசம் இருந்தாலும் கடந்த 1994-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் 20 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு பாலுமகேந்திரா மரணமடைந்துவிட்டார். அதன்பிறது திருணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வசித்து வரும் நடிகை மவுனிகா, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், மீண்டும் ஒரு மரியாதை, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் புதிய தொடரான ஆஹா கல்யாணம் தொடரில் நடித்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் பேட்டியில் நடிகை மவுனிகா பாலுமகேந்திரா இறக்கும் முன் தன்னிடம் 2 சத்தியம் செய்ய சொன்னதாக கூறியுள்ளார். அதில் ஒன்று தான் இறந்த பிறகு உனக்கு பிடித்த இயக்குனர்களில் படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு தானும் சம்மதித்து சத்தியம் செய்ததாகவும் கூறியுள்ள மவுனிகா, 2-வதாக தன்னை வேறு திருமணம் செய்துகொள்ளும்படி சத்தியம் கேட்டதாகவும், அதற்கு முடியாது என்று சத்தியம் செய்ய மறுத்துவிட்டதாகவும் கூறியுயள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment