Advertisment

நீங்கள் என் தாய் மட்டுமல்ல... நளினி பிறந்த நாளில் மகள் உருக்கமான பதிவு!

நீங்கள் என் தாய் மட்டுமல்ல. எனது சிறந்த நண்பர். எனது நம்பிக்கைக்கு உரியவர். இந்த உலகில் எனக்கு தெரிந்த மிக அழகான ஆன்மா நீங்கள் தான்.

author-image
WebDesk
New Update
Nalini Daughter

பழம்பெரும் நடிகை நளினியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மகள் அருணா தனது அம்மா குறித்து உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நடிகைகள் பலரும் இந்த பதிவுக்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நளினி. விஜயகாந்த், மோகன், ராமராஜன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராணுவ வீரன் என்ற படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தார். பல பக்தி படங்களில் நடித்துள்ள நளினி, தனது பெற்றோரை போலவே நடனத்தில் கைதேர்ந்தவராக இருந்தார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நளினி, முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அருண் அருணா என இரு பிள்ளைகள் உள்ள நிலையில், 10 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின், நளினி தனது கணவரை விவாகரத்து செய்து தனது பிள்ளைகளுடன் தனியாக வழ தொடங்கினார். விவாகத்துக்கு பின் சின்னத்திரையில் அறிமுகமான நளினி பல சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

தற்போது சீரியல் மற்றும் திரைப்படம் என பிஸியாக இருக்கும் நளினி அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதேபோல் கணவரை பிரிந்துவிட்டாலும், தனது இரு குழந்தைகளையும் வளர்த்து படிக்க வைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் நல்லபடியாக வாழ்வதை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். தற்போது தனது பிறந்த நாளை மகன் மற்றும் மகளுடன் எளிமையாக கொண்டாடிய நளினியின் புகைப்படங்களை அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவரது மகள் வெளியிட்டுள்ள பதிவில், எப்படி எல்லோரிடமும் அன்பாக இருக்க முடிகிறது என்பதை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன். உங்களின் உண்மையான காதலை உங்களை சார்ந்தவர்கள் உணரவில்லை என்பதை நான் உணர்வேன். நீங்கள் என் தாய் மட்டுமல்ல. எனது சிறந்த நண்பர். எனது நம்பிக்கைக்கு உரியவர். இந்த உலகில் எனக்கு தெரிந்த மிக அழகான ஆன்மா நீங்கள் தான். ஒவ்வொரு நாளும் நான் உங்களை போல நம்ப முடியாத பாதியாக இருக்கிறேன். எங்கள் இதயமாக இருப்பதற்கு நன்றி.

எங்களுக்கான அரவணைப்புகளும், ஒவ்வொரு ஊக்க வார்த்தைகளும், நீங்கள் எங்களை வளர்க்க செய்த தியாகத்திற்கும் நன்றி அம்மா என்று நளினியின் மகள் அருணா உருக்கமாக பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nalini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment