குட்டி பத்மினியின் கிருஷ்ணதாசி சீரியலில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவம் குறித்து, இதனால் ஏற்பட்ட மனநிலையில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்தும் நடிகை நளினி பேசியுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தவர் குட்டி பத்மினி. சிவாஜியுடன், தெய்வ பிறவி, பாசமலர், நவராத்திரி, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள குட்டி பத்மினி, தெலுங்கு மலையாளம் இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக உத்தரவு மகாராஜா என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதேபோல் சின்னத்திரையில், பல நிகழ்ச்சிகளை தயாரித்தும், இயக்கியும், வெளியிட்டுள்ள குட்டி பத்மினி, கடந்த 2000-ம் ஆண்டு, கிருஷ்ணதாசி என்ற சீரியலை தயாரித்திருந்தார். ஜெமினி கணேசன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த சீரியலில் நடிகை ரஞ்சிதா நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் நடிகை நளினி முதல்முறையாக சின்னத்திரையில் அறிமுகமானர். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனிடையே இந்த சீரியலில், நடித்த நடிகை நளினி, அதன் அனுபவம் குறித்து குட்டி பத்மினியின், யூடியூப் சேனலில் கூறியுள்ளார். அதில், கிருஷ்ணதாசி சீரியல் நேரத்தில் எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலைமையில் தான், நான் இருந்தேன். அப்போது என்னை நீங்கள்தான் (குட்டி பத்மினி) குழந்தை போல பார்த்துக்கிட்டீங்க. என் மனநிலை சிதறாமல், என்னை கட்டுப்படுத்தியது நீங்கள்தான். இன்னொரு வாழ்க்கை இருக்கு, அதையெல்லாம் நீ பார்க்கணும், அதை நீ ரசிக்கணும் என்று சொல்லி, என்னை வழிநடத்தி, எனக்கு பாடம் நடத்தியது நீங்கள்தான்.
Advertisment
Advertisement
கிருஷ்ணதாசி சீரியலில் என்னை நடிக்க வைக்க நீங்கள் பட்ட பாடுகளை வெறும் வார்த்தைகளில் சொல்ல முடியாது. இன்னைக்கு நான் சாப்பிடுற ஒவ்வொரு அரிசியிலும் உங்க பேர்தான். அதேபோல சீரியல் தயாரிப்பாளர் பிரபு சார், ரஞ்சிதாவையும் இங்கே சொல்லியாகணும். எனக்கு உந்துதல் தந்துட்டே இருந்தாங்க. முதல்நாள் நடிக்க முடியாமல் போய்ட்டேன். 2-வதுநாள் டயலாக் பிராம்ட்டிங் கேட்டுட்டு, புதுசா இருக்குதுன்னு சொல்லிட்டு போயிட்டேன்.
3வதுநாள், நீங்க வந்து எனக்கு அரணாக வந்து நின்றீங்க. என்னை வழிநடத்தியது கிருஷ்ணதாசிதான். ஜெமினி கணேசன் சாருடன் நடித்ததில் ரொம்ப பெருமை. அவரது 80வது பிறந்தநாளுக்கு, அவரிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கியதை எல்லாம் மறக்கவே முடியாது. எப்போதுமே நான் 3.16-க்கு விடிகாலையில் எழுந்துவிடுவது பழக்கம். அப்போது யாரோ என்னை தட்டி எழுப்புவது போல இருக்கும். காலை பிடித்து இழுப்பது போல இருக்கும்.
இந்த பிரபஞ்சம் ஏதோ என்னிடம் சொல்வதுபோல அந்த நொடியில் தோன்றும். உடனே நான் கை, கால் முகம் கழுவிக்கொண்டு, விளக்கேற்றி உட்கார்ந்துவிடுவேன். அது என்னுடைய நேரமாக இருக்கும். சில விஷயங்களை நான் சொன்னால், யாரும் நம்ப மாட்டாங்க. ஆனால், எனக்கு வாழ்வில் நடக்கும் அனுபவமெல்லாம் வேற மாதிரி. நம்புகிறவர்களுக்கு தெய்வம். அந்தவகையில் என்னை வழிநடத்துவது இந்த யூனிவர்ஸ்தான் என்று நளினி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“