சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் தத்தளித்துக்கொண்டிருந்த நடிகை நமீதா பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் தீயணைப்பு துறை வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், புறநகர் ரயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, நீர்வரத்து அதிகரித்தால், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைத்து அருகில் உள்ள பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், துரைப்பாக்கம் எக்ரட் பார்க் குடியிருப்பில் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த குடியிறுப்பில் தனது இரு குழந்தைகள் மற்றும் கணவருடன் வசித்து வந்த நடிகை நமீதா வெள்ளத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த நடிகை நமீதா அவரது கணவர் மற்றும் அவரது இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்டதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நமீதாவின் கணவர் திமுக வட்ட செயலாளர் தான் தங்களுக்கு 2 நாட்கள் உணவு கொடுத்தார். அவருக்கும் எங்களை சிறப்பப்பட்டு மீட்ட மீட்பு குழுவினருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“