Advertisment

லேடி ஹிட்லராக மாஸ் என்ட்ரி... ஜீ தமிழ் சீரியலில் பாக்கியலட்சுமி நடிகை : வில்லியா இருப்பாரோ!

வசந்தம் வந்தாச்சு, காசு இருக்கனும் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ள நந்திதா ஜெனிபர், பார்த்திபன் கனவு படத்தில் வரும் வாடி மச்சினியே உள்ளிட்ட பல பாடல்களளுக்கு நடனமாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
nanthitha Jenif

நந்திதா ஜெனிபர்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்து வந்த நடிகை நந்திதா ஜெனிபர் அந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் சீரியலில் என்டரி கொடுத்துள்ளார்.

Advertisment

கடந்த 2000-ம் ஆண்டு அர்ஜூன் – மீனா நடிப்பில் வெளியான ரிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நந்திதா ஜெனிபர். தொடர்ந்து, முத்தம், அற்புதம், இன்று முதல், உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், பாரதிராஜா இயக்கததில் வெளியான ஈரநிலம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

மேலும் வசந்தம் வந்தாச்சு, காசு இருக்கனும் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ள நந்திதா ஜெனிபர், பார்த்திபன் கனவு படத்தில் வரும் வாடி மச்சினியே உள்ளிட்ட பல பாடல்களளுக்கு நடனமாடியுள்ளார். கடைசியாக ஹன்சிகா நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான மகா என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிரும் பல படங்களில் நடித்துள்ளார்.

2008-ம் ஆண்டு நாகவள்ளி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நந்திதா ஜெனிபர், சன்டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ், கலர்ஸ் தமிழின் அம்மன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். கடைசியாக விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஜெனிபர், அதில் இருந்து விலகிய நிலையில், பெரிய இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் ரீ- என்ட்ரி ஆகியுள்ளார்.

சொத்துக்கள் மீது பேராசை கொண்ட அண்ணன்களை திருத்த கார்த்திக் தனது கம்பெனியிலேயே வேலைக்கு சேர்ந்துள்ள நிலையில், அவனை வேலையில் இருந்து தூக்குவதற்காக, வோறொரு கம்பெனிக்கு அனுப்புகின்றனர். அந்த கம்பெனியின் முதலாளி தான் நந்திதா ஜெனிபர். இனி கார்த்தி இவரின் கம்பெனியில் தான் வேலை செய்ய வேண்டும். ஜெனிபர் – கார்த்திக் தொடர்பான காட்சிகள் அடுத்த வாரம் முதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment